சீன மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் தொடர்பு
2022-06-28 10:40:02

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆப்கானிஸ்தான் தற்காலிக அரசின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் முட்டாகியுடன் ஜுன் 27ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு வாங் யீ மீண்டும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் மக்கள் இன்னல்களைச் சமாளிக்க உதவி செய்யும் வகையில், ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனித நேய உதவியைச் சீனா ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி வருகின்றது.

மனித நேய உதவி மற்றும் பொருளாதார மீட்சிக்கான இணைப்பு அமைப்பு முறையின் இரண்டாவது கூட்டத்தைச் சீனாவும் ஆப்கானிஸ்தானும் நடத்தவுள்ளன. மக்கள் வாழ்வாதாரம், பொருளாதார மற்றும் வர்த்தகம், வேளாண்மை, சுரங்கத்தொழில் முதலிய துறைகளில் ஒத்துழைப்பை இரு தரப்புகள் பயனுள்ள முறையில் முன்னேற்ற வேண்டும் என்று வாங் யீ விருப்பம் தெரிவித்தார்.

சீனாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையிலான பாரம்பரிய நட்பைச் சீனாவின் உதவி முழுமையாகக் காட்டுகின்றது என்று முட்டாகி கூறினார். பல்வேறு துறைகளில் சீனாவுடனான நட்புறவை வளர்க்க ஆப்கானிஸ்தான் எப்போதும் பாடுபடும் என்றார்.