சீனாவின் 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி
2022-06-28 14:52:49

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை ஜுன் 28ஆம் நாள் பிற்பகல், கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி என்ற தலைப்பிலான செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.

கடந்த 10 ஆண்டுகளாக, சீனப் பொருளாதார ஆற்றல் புதிய நிலைக்கு உயர்ந்துள்ளது. தரமிக்க வளர்ச்சிக்கு மாறி வரும் போக்கில், ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை சீனா இடைவிடாமல் மேம்படுத்தி வருகிறது. பொருளாதார மொத்த தொகை 2012ஆம் ஆண்டில் இருந்த 53 லட்சத்து 90 ஆயிரம் கோடி யுவானிலிருந்து 2021ஆம் ஆண்டில் இருந்த 1 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானாக உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரத்திலுள்ள சீனாவின் விகிதம் 11.3 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மேலும், நாட்டின் புத்தாக்கக் கட்டுமானம் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. முக்கிய பிரதேச நெடுநோக்குகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி பயனுள்ள முறையில் முன்னேற்றப்பட்டுள்ளன. புதிய நகர மயமாக்கத்தின் நிலை மற்றும் தரம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.