பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பெரும் சாதனைகள்
2022-06-28 10:53:34

அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் நாட்டு எண்ணியல் பொருளாதாரக் கூட்டாளி உறவின் கட்டுக்கோப்பு எட்டப்பட்டது. செயல்களை வழிகாட்டலாகக் கொண்டு தொலைநோக்கு மற்றும் சகிப்புத் தன்மை வாய்ந்த முக்கிய சாதனை ஆவணமாக இது திகழ்கிறது என்று சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேசப் பிரிவுத் துணைத் தலைவர் ச்சென் சாவ் ஜுன் 27ஆம் நாள் தெரிவித்தார்.

தொடர்புடைய நிறுவனத்தின் மதிபீடு மற்றும் கணக்கீட்டின்படி, 2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளில், இணைய வழி மூலம் பொருட்களை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை 135 கோடியை எட்டும். உலகளவில் இது 61 விழுக்காடு வகிக்கும். மேலும், நாட்டைக் கடந்த இணையச் சில்லறை விற்பனையின் மொத்த தொகை 55 ஆயிரத்து 360 கோடி அமெரிக்க டாலரை எட்டும். உலகளவில் இது 41 விழுக்காடு வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.