அமெரிக்க அரசியல்வாதிகளின் மற்றொரு சூழ்ச்சி
2022-06-28 10:11:31

26ஆம் நாள் துவங்கிய ஜி7 உச்சி மாநாட்டில், அமெரிக்க அரசுத் தலைவர் பைடன், உலக உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு கூட்டாளியுறவு பற்றிய முன்மொழிவை அறிவித்தார்.

சீனா முன்மொழிந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை எதிர்க்கும் வகையில் இம்முன்மொழிவு வெளியிடப்பட்டது என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.

மேலும் சிறந்த உலகத்தை மீண்டும் உருவாக்குவதற்கான கூட்டுறவு கடந்த ஆண்டில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் முன்மொழியப்பட்டது. அதன்படி, வளரும் நாடுகளின் உள்கட்டமைப்புக்கு 40 இலட்சம் கோடிக்கு மேலான அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படும். ஆனால், இப்போது வரை 60 இலட்சம் அமெரிக்க டாலர் மட்டும் முதலீடு செய்யப்பட்டது.

அமெரிக்காவின் முன்மொழிவுகள் தூய்மையற்ற நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டன. அடிப்படை வசதி ஆக்கப்பணியின் பெயரில், சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவைச் சீர்குலைப்பது,  அமெரிக்க அரசியல்வாதிகளின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா சீனாவுடன் போட்டியிடும் தவறான வழிமுறை, இதுவே ஆகும் என்று அமெரிக்காவின் தூதாண்மை விவகாரம் என்ற இதழின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. இது அமெரிக்க அரசியலாளர்கள் கேட்கத்தக்க கருத்து ஆகும்.