சீன வளர்ச்சி மீது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நம்பிக்கை
2022-06-29 18:49:12

சந்தைமயமாக்கம், சட்டமயமாக்கம், சர்வதேசமயமாக்கம் வாய்ந்த வணிக சூழலைத் தொடர்ந்து உருவாக்குவதன் மூலம்,  சீன சந்தை மீதான வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் மன நம்பிக்கையைச் சீனா உயர்த்தி உள்ளதோடு, சீனாவில் முதலீடு விரிவாக்குவதற்கான அவற்றின் மனவுறுதியும் அளிக்கப்பட்டுள்ளது என்று சீன சர்வதேச வர்த்தக முன்னேற்ற மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபெங் யாவ்சியாங் 29ஆம் நாள் தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் சீனாவில் நடைமுறைக்கு வந்த வெளிநாட்டு முதலீடு கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 22.6விழுக்காடு அதிகமாகும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் வலுவான ஈர்ப்பாற்றலாக சீனா உள்ளது என்றும் அவர் கூறினார்.