ஏழு நாடுகள் குழுவின் உச்சிமாநாடு
2022-06-29 09:42:52

ஏழு நாடுகள் குழுவின் உச்சிமாநாடு 28ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியாவி மாநிலத்தில் நிறைவடைந்தது. ஏழு நாடுகள் குழு உலகளாவிய பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாது என்று உலகளவில் பலர் விமர்சித்தனர்.

உக்ரைன் நிலைமை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார மீட்சி, விநியோகச் சங்கிலி சீர்திருத்தம், கரோனா வைரஸ் கட்டுபாடு ஆகியவை குறித்து இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் விவாதித்தனர்.

ரஷியாவின் மீதான தடை நடவடிக்கையை வலுப்படுத்தி, உக்ரைனுக்கான நிதியுதவி, மனித நேயம் மற்றும் ராணுவ ஆதரவுகளை வழங்க வேண்டும் என்று  ஏழு நாடுகள் குழுவினர் தெரிவித்தனர்.