ஆப்கனுடனான வர்த்தக விசா கொள்கை தளர்வு: பாகிஸ்தான் முடிவு
2022-06-29 18:36:55

ஆப்கானிஸ்தானுடனான வர்த்தக விசா கொள்கையைத் தளர்த்தப் பாகிஸ்தான் அரசு ஜூன் 28ஆம் நாள் முடிவெடுத்துள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதாரத்துக்குத் துணையாக இருக்கும்.

ஆப்கனின் சரக்குப் போக்குவரத்து பணியாளர்களுக்கு ஆறு மாதத்தில் பன்முறை வந்துசெல்வதற்கான விசா வழங்கவுள்ளது. அதே வேளையில், விசா காலவரம்பை ஓராண்டுக்கு நீட்டிக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கு உண்டு என்று பாகிஸ்தான் தலைமை அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.