உலக எதிர்கால அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்க ஒத்துழைப்பு மாநாடு
2022-06-29 18:53:01

ஜுலை 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் உலகளாவிய எதிர்கால அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்க ஒத்துழைப்பு மாநாட்டை சீனா நடத்த உள்ளது என்று சீன வர்த்தக முன்னேற்ற மன்றத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜுன் 29ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், அறிவியல் தொழில் நுட்பம் எதிர்காலத்துக்கு வந்து சக்தி கொண்டு வருதல், புத்தாக்கம் வளர்ச்சியை வழிநடத்துதல் என்பது நடப்பு மாநாட்டின் தலைப்பாகும் என்று தெரிவித்தார்.

மேலும், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் உலகின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவது, எண்ணியல் வர்த்தகம், நுண்ணறிவுசார் தயாரிப்பு, செய்தி தொடர்பு, தானியங்கி வாகனம் முதலிய கருப்பொருட்கள் இதில் விவாதிக்கப்பட உள்ளது.