பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்க்கோஸுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2022-06-30 16:28:33

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 30ஆம் நாள் பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள ஃபெர்டினாண்ட் மார்க்கோஸுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் அனுப்பிய வாழ்த்து செய்தியில், அண்டை நாடுகளுடன் நட்புறவுக் கொள்கையில் ஊன்றி நின்று இரு நாடுகளும் கையோடு கைகோர்த்து கொண்டு கூட்டு வளர்ச்சியை உருவாக்குவது குறித்து ஒத்த கருத்தை எட்டியுள்ளோம். அரசுத் தலைவர் மார்க்கோஸுடன் இணைந்து, நீண்டகால மற்றும் தொலைநோக்குப் பார்வையில் இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும். புதிய காலத்தில் இரு நாடுகளின் நட்பு ஒத்துழைப்பின் அத்தியாயத்தைத் தொடர்ந்து எழுதி இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.