பாகிஸ்தானின் கரோட் நீர் மின் நிலையத்தின் வணிகச் செயல்பாடு தொடக்கம்
2022-06-30 19:02:45

பாகிஸ்தானிலுள்ள கரோட் நீர் மின்னாற்றல் நிலையம் ஜுன் 29ஆம் நாள் வணிக ரீதியில் செயல்பாட்டை முழுமையாக தொடங்கியது. இந்நீர் மின்னாற்றல் நிலையத்தில் ஆண்டுதோறும் 320கோடி கிரோவாட்  அளவில் தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, பாகிஸ்தானில் 50இலட்சம் பேரின் பயன்பாட்டுத் தேவையை நிறைவு செய்யக் கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அந்நாட்டின் மின்னாற்றல் பற்றாக்குறை தணிவு, எரிப்பொருட்கள் அமைப்புமுறையின் மேம்பாடு, பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சி ஆகியவற்றுக்கு, இந்த நீர் மின்னாற்றல் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது.

2015ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் கரோட் நீர் மின்னாற்றல் நிலையத்தின் கட்டுமானம் துவங்கியது. அதற்கான மொத்த முதலீட்டுத் தொகை 174கோடி அமெரிக்க டாலர்.