அமெரிக்க சரகுந்து சம்பவத்துக்குப் பின்னணி என்ன?
2022-06-30 11:39:33

அமெரிக்க டாக்சாஸ் மாநிலத்தில் கைவிடப்பட்ட ஒரு சரக்குந்தில் அகதிகளின் சடலங்கள் அண்மையில் கண்டறியப்பட்டன. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட அகதிகளின் உயிரிழப்பில் இது மிக அதிகம் என்று தெரிகிறது. இத்துயரமான சம்பவம் குறித்து, சர்வதேச சமூகத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐ.நா பொதுச் செயலாளர் அலுவலகமும், இதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.

அகதிகளின் பிரச்சினை, அமெரிக்க அரசியல்வாதிகளின் வெறும் கருவியாகும் என்று அமெரிக்க பலிட்டிக்கோ இதழ் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய அரசுத் தலைவர் ஜோ பைடன் பதவி ஏற்ற போது, குடியேற்ற சட்டத்தை முழுமையாகச் சீரமைக்கும் வாக்குறுதியை அளித்தார். கட்சிகளுக்கிடையிலான போராட்டத்தினால் சீரமைப்புப் பணியில் முன்னேற்றம் எதுவும் இல்லை. 1823ஆம் ஆண்டு லத்தின் அமெரிக்காவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்கா மன்ரோவாதத்தை முன்வைத்து, அப்பிராந்திய நாடுகளின் ராணுவம் மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. தீவிர வறுமை, வன்முறை குற்றம் முதலியவை, லத்தின் அமெரிக்கர்கள் அகதிகளாக வெளியேறுவதற்கான முக்கிய காணமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.