பிரிக்ஸ் நாடுகளின் தொடரவல்ல வளர்ச்சிக்கான உயர் நிலை கருத்தரங்கு
2022-06-30 10:05:22

பிரிக்ஸ் நாடுகளின் தொடரவல்ல வளர்ச்சிக்கான உயர் நிலை கருத்தரங்கு ஜுன் 29ஆம் நாள் ஃபூசோ நகரில் துவங்கியது. பிரிக்ஸ் நாடுகளின் அரசுத் துறைகள், நிதி நிறுவனங்கள், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், பிரதேச அமைப்புகள் முதலியவற்றைச் சேர்ந்த சுமார் 400 பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் பங்கெடுத்துள்ளனர்.

கோவிட்-19 நோய் தோற்று பரவல் தடுப்பு, சுகாதார மற்றும் ஆரோக்கிய ஒத்துழைப்பு, எண்ணியல் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு பகிர்வு, தொழில் மற்றும் வினியோகச் சங்கிலிகளின் இணைப்பு, பசுமை மற்றும் கரி குறைந்த வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதம் நடத்தப்பட உள்ளது.