சீனாவில் தரைப் போக்குவரத்துத் துறையில் சாதனைகள்
2022-06-30 11:26:30

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு இறுதி வரை, சீனாவில் புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் இருப்புப் பாதையின் மொத்த நீளம் 11 இலட்சம் கிலோமீட்டர் அடைந்துள்ளது. இது நில நடுக்கோட்டைச் சுற்றினால் 27.5 வளையங்களுக்குச் சமம்.

 தற்போது வரை, சீனாவில் உயர்வேக நெடுஞ்சாலையின் நீளம் 1.6 இலட்சம் கிலோமீட்டராகும். தலா நூறு சதர கிலோமீட்டர் நிலப்பரப்புக்கு 55 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது. இது 2012ஆம் ஆண்டில் இருந்ததை விட 24.6 விழுக்காடு அதிகம்.

கடந்த 10 ஆண்டுகளாக, நெடுஞ்சாலைகள், பாலங்கள் ஆகியவை சீனாவின் அழகான அடையாளங்களாக மாறியுள்ளன.