ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் வாங்யீ உரை
2022-06-30 09:58:28

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜுன் 29ஆம் நாள் பெய்ஜிங்கிலிருந்து காணொளி வழியாக “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வரலாறு, நடப்பு நிலை மற்றும் எதிர்காலம்”என்ற தலைப்பிலான வட்ட மேசைக் கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், தற்போதைய உலகம், பதற்றமாக மாறிவரும் புதிய கட்டத்தில் உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இதர உறுப்பு நாடுகளுடன் இணைந்து பொறுப்பேற்று, மேலும் நெருங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது சமூகத்தை உருவாக்குவதை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.

மேலும், பனிப் போர் கருத்து மற்றும் முகாங்களுக்கிடையிலான எதிரெதிர் நிலையை உறுதியாக எதிர்த்து, சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கலை முன்னேற்றி, மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்கு இவ்வமைப்பின் ஆற்றலை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.