அமெரிக்காவின் லாரியில் 53 குடியேறியவர்கள் உயிரிழப்பு
2022-06-30 17:22:31

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோவிலுள்ள ஒரு லாரியில் உயிரிழந்த குடியேறியவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்தது. அவர்களில் 40ஆண்களும் 13பெண்களும் அடக்கம்.

லாரியில் மொத்தமாக 67பேர் இருந்தனர். உயிரிழந்தவர்களில் 27பேர் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள். 14பேர் ஹோண்டுராஸைச் சேர்ந்தவர்கள். இருவர் சால்வடாரைச் சேர்ந்தவர்கள். 3பேரின் குடியுரிமை இன்னும் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.