ஒரு நாட்டில் இரண்டு அமைப்புகள் ஹாங்காங்கில் வெற்றி பெற்றுள்ளது ஏன்?
2022-07-01 19:23:44

1997ஆம் ஆண்டு ஜுலை முதல் நாள், ஹாங்காங்  தாய்நாட்டிற்கு திரும்பியதுடன், ஒரு நாட்டில் இரண்டு அமைப்புகள் என்ற கொள்கை ஹாங்காங்கில் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு முற்றிலும் புதிய அரசியல் ரீதியிலான நடைமுறையாக்கம் தொடங்கப்பட்டது. அதையடுத்த 25 ஆண்டுகளில், பல்வேறு அறைகூவல்களைச் சமாளித்து வந்துள்ள ஹாங்காங்,  சர்வதேச நிதி, போக்குவரத்து மற்றும் வர்த்தக மையம் போன்ற சிறந்த நிலையைத் தொடர்ந்து கொண்டுள்ளது. பொருளாதாரத் துறையை எடுத்துக்காட்டாகக் கொண்டு, ஹாங்காங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு, 1997ஆம் ஆண்டில் இருந்த 1லட்சத்து 37ஆயிரம் கோடி ஹாங்காங் டாலரில் இருந்து 2021ஆம் ஆண்டு 2லட்சத்து86ஆயிரம் கோடி டாலாராக உயர்ந்துள்ளது. 25 ஆண்டுகளில், ஹாங்காங்கில் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் படைக்கப்பட்டுள்ள சாதனைகள், ஒரு நாட்டில் இரண்டு அமைப்புகள் கொள்கையின் சிறப்பம்சத்தை எடுத்துரைகின்றன.

ஒரு நாட்டில் இரண்டு அமைப்புகள் நடைமுறையிலேயே மீண்டும் மீண்டும் சோதிக்கப்பட்டுள்ளதோடு, அது, நாடு மற்றும் தேசத்தின் அடிப்படை நலன்களுக்கும் ஹாங்காங்கின் அடிப்படை நலன்களுக்கும் பொருத்தமானது என்று ஹாங்காங்கின் வளர்ச்சி நிரூபித்து வருகிறது.  

எதிர்காலத்தில் ஒரு நாட்டில் இரண்டு அமைப்புகள் என்ற கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தால், ஹாங்காங்கின் நீண்டகால செழிப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்வது மட்டுமல்லமால், சீனா நவீனமயமான நாட்டை உருவாக்குவதிலும் அது பெரிய பங்காற்றும்.