உக்ரைன் உணவு ஏற்றுமதிக்கு ரஷியா தடையிடாது:புதின்
2022-07-01 16:14:30

உக்ரைனின் உணவு ஏற்றுமதிக்கு ரஷியா தடை இடாது என்று ரஷிய அரசுத் தலைவர் புதின் ஜூன் 30ஆம் நாள் அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோக்கோ விடோடோவை சந்தித்த போது தெரிவித்தார்.

ஜி20 உச்சிமாநாட்டில் ரஷியா பங்கேற்க வாய்ப்பு உண்டு. புதின் அல்லது சிறப்பு பிரதிநிதி இதில் பங்கேற்பார் என்று ரஷிய அரசுத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.