ஷிச்சின்பிங் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி லீ ஜியாச்சாவ் சந்திப்பு
2022-07-01 15:27:10

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை முதல் நாள் காலை ஹாங்காங்கில் புதிதாக பதவியேற்றுள்ள ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி லீ ஜியாச்சாவ்வைச் சந்தித்துரையாடினார்.

சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் புதிய அரசு சட்டத்தின்படி ஆட்சி புரிதலுக்கு மத்திய அரசு முழு மூச்சுடன் ஆதரவளிக்கும். புதிய அரசின் மீதும் ஹாங்காங்கின் எதிர்காலம் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம் என ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கும் மத்திய அரசுக்கும் லீ ஜியாச்சாவ் நன்றி தெரிவித்தார். சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசைத் தலைமையேற்று, ஹாங்காங் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை படைப்பதற்கு முழு மூச்சுடன் செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்.