ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 25ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் ஷி ச்சின்பிங் உரை
2022-07-01 12:08:10

ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 25ஆவது ஆண்டு நிறைவு மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசு பதவி ஏற்பு விழா ஜுலை முதல் நாள் காலையில் கோலாகலமாக நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், ஹாங்காங்கின் ஜனநாயக அமைப்பு முறை, ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கைக்குப்  ஏற்றதாக உள்ளது  அதுவும், ஹாங்காங் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும், ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிதானத்துக்கும் நலன் தரும் வகையில் உள்ளது என்று கூறினார்.

ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கை, நாட்டின் 140 கோடி மக்கள், ஹாங்காங் மற்றும் மக்கௌ மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. சர்வதேச சமூகத்திலும் அதற்குப் பொது ஆதரவு கிடைத்துள்ளது.  சீன மத்திய அரசின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் உயர்ந்த தன்னாட்சி அதிகாரத்தையும் ஒன்றிணைத்து உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் தான், இப்பிரதேசத்தைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

நாட்டுபற்றுடையவரே ஹாங்காங்கை ஆளுவது என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேச நிதி, கப்பல் போக்குவரத்து, வர்த்தகத்தின் மையம் என்ற தகுநிலையை வலுப்படுத்த வேண்டும். ஹாங்காங்கின் தனிச்சிறப்பான தகுநிலை மற்றும் நன்மைகளை நிலைநிறுத்துவதை சீன மத்திய அரசு முழுமையாக ஆதரித்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.

ஜுலை 1ஆம் நாள் காலை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முன்னிலையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது அரசின் முக்கிய அதிகாரிகள், இப்பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லி ஜியாச்சாவ்வின் தலைமையில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றனர்.