கவுலூன் பண்பாட்டு மாவட்டத்தில் பெங் லியுவான் பயணம்
2022-07-01 18:46:04

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் அம்மையார் ஜூன் 30ஆம் நாள் மாலை ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் கவுலூன் பண்பாட்டு மாவட்டத்திலுள்ள நாடக மையத்திற்குச் சென்று இந்த மாவட்டத்தின் வளர்ச்சி வரலாறு பற்றி அறிந்து கொண்டார். அங்குள்ள திரையரங்கில் கான்டோனீஸ் நாடகக் கலையை அவர் கண்டுரசித்து பண்பாட்டுப் படைப்புகளின் புத்தாக்கத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடினார்.