உலகச் சாலை பாதுகாப்பு நடவடிக்கை
2022-07-01 10:29:30

ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஜாங் ஜுன் ஜூன் 30ஆம் நாள்  ஐ.நா. பேரவையில் உலகச் சாலை பாதுகாப்பு பற்றி நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் உரை நிகழ்த்திய போது, வளரும் நாடுகளின் சாலை போக்குவரத்து அடிப்படை வசதிக் கட்டுமானத்துக்குச் சர்வதேசச் சமூகத்தின் மாபெரும் ஆதரவு அவசரமாகத் தேவைப்படுகிறது என்றார்.

புதிய ரக கரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகப் பொருளாதார மீட்சி கடினமாக இருக்கின்றது. முதலீடு மற்றும் நிதி பற்றாக்குறைவளரும் நாடுகள் எதிர்கொள்ளும் அறைகூவல்களில் மிகவும் முக்கியமானவை என்றும் அவர் கூறினார்.

2020ஆம் ஆண்டு ஐ.நா. பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் படி, 2021ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டுக்குள் சாலைப் பாதுகாப்புக்கான இரண்டாவது தசாப்தமாக உறுதி செய்யப்பட்டது. சாலை விபத்தினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் காயங்களை குறைந்தது 50 விழுக்காடு குறைப்பது இந்த பத்து ஆண்டுகளின் இலக்காகும்.