ஸ்வீடன் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது
2022-07-01 18:37:28

 ஸ்வீடன் அதிகரித்து வரும் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதம், ஜுலை 6ஆம் நாள் அந்நாட்டு மத்திய வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.15விழுக்காட்டில் இருந்து 0.75விழுக்காடாக அதிகரிக்க உள்ளது. இது, இவ்வாண்டில் ஸ்வீடனில்  மிகப் பெரிய அளவில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

1991ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு காணாத பண வீக்க உயர்வைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கப்படும் என்றும், 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில்,  அடிப்படை வட்டி விகிதம் சுமார் 2விழுக்காடு எட்ட வாய்ப்புகள் அதிகம் என்றும் ஸ்வீடன் மத்திய வங்கி தெரிவித்தது.