ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் கலவரத்தை உண்டு செய்ய கூடாது
2022-07-01 11:40:12

நேட்டோவின் மாட்ரிட் உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு புதிய நெடுநோக்கு ஆவணத்தில், சீனா ஐரோப்பா-அட்லாண்டிக் பிரதேசத்துக்கு அமைப்பு ரீதியான அறைகூவலை ஏற்படுத்தி வருகின்றது என்று கூறப்பட்டது. சீனாவை அதன் மிகப் பெரிய நெடுநோக்குப் போட்டியாளராக அமெரிக்கா அறிவித்த பிறகு, நேட்டோ மீண்டும் அமெரிக்காவின் அரசியல் கொடுமைக்காரனாகச்  செயல்பட்டுள்ளதை இது காட்டுகின்றது.

ஆசிய-பசிபிக் விவகாரங்களில் தலையிடுவது, அமெரிக்கா நேட்டோவின் விரிவாக்கத்துக்கு ஆதரவு அளிப்பதற்கான நோக்கமாகும். இது பற்றி பிராந்திய நாடுகள் உயர் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடவும் சித்தாந்தத்தை பரப்பவும் இல்லை. ஆட்சி எல்லையை இதர நாடுகளுக்கு நீட்டிக்கவும், பொருளாதார வலுக்கட்டாயத்தை மேற்கொள்ளவும், ஒரு சார்பு தடை மேற்கொள்ளவும் விரும்பவில்லை. நேட்டோவுக்கு எப்படி அமைப்பு ரீதியான அறைகூவலை ஏற்படுத்தும்?

பிற நாட்டின் நலன்களைப் பாதிப்பதன் மூலம் தனிக் குழுவை அமைப்பதானது மிக மோசமான வழிமுறையாகும் என்று பிரேசில் சென்ட் பால் மாநிலத்து பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொருளியல் துறை பேராசிரியர் மாஸ்கோ சுட்டிக்காட்டினார்.