ஐ.நாவின் பெருங்கடல் மாநாட்டின் லிஸ்பன் அறிக்கை
2022-07-02 16:31:42

2022ஆம் ஆண்டு ஐ.நா பெருங்கடல் மாநாடு ஜுலை முதல் நாள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் நகரில் நிறைவடைந்துள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகள் லிஸ்பன் அறிக்கையை ஏற்றுக் கொண்டன. தற்போதைய கடல் நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், அறிவியல் மற்றும் புத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டு, கடல் சார் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்புகள் ஒப்புகொண்டுள்ளன.

பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா துணை தலைமை செயலாளரும் இம்மாநாட்டின் தலைமை செயலாளருமான லியு ச்சேன்மின் கூறுகையில்,

பல்வேறு துறைகள், கடல் சார் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, தீர்மானத்துக்கான அறிவியல் ஆதாரத்தை அதிகரித்து, ஒன்றுக்கு ஒன்று கற்று கொள்வதன் மூலம், அறிவியல் கூட்டாளியுறவை வலுப்படுத்த வேண்டும் என்றார்.