சீனச் சரக்கு போக்குவரத்து துறையின் புதிய சாதனை
2022-07-02 17:28:25

சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம் ஜூலை 2ஆம் நாள் வழங்கிய தகவலின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜுன் திங்கள் வரை, சீன இருப்புப்பாதைகளின் மூலம் அனுப்பப்பட்டுள்ள சரக்குகளின் எடை 194.6 கோடி டன்னை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.5 விழுக்காடு அதிகமாகும். நாளுக்கு அனுப்பப்பட்டுள்ள சரக்குகளின் எடை உள்ளிட்ட பல குறியீடுகள் வரலாற்றில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளன. பொருளாதார மற்றும் சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கு இது பெரும் போக்குவரத்து ஆதரவை அளித்து வருகிறது.

மேலும், சீன-ஐரோப்பிய தொடர்வண்டிகள் இயல்பாக இயங்குவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தரமான கட்டுமானத்துக்குத் துணைப் புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.