அடுத்த 5 ஆண்டுகளில் ஹாங்காங்கின் புதிய முன்னேற்றம்
2022-07-02 16:24:29

ஜூலை முதல் நாள் நடைபெற்ற ஹாங்காங் தாய்நாட்டுடன் இணைந்த 25ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாடு மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6வது அரசின் பதவி ஏற்பு விழாவில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகள் ஹாங்காங் புதிய நிலைமையைத் துவக்கி வைத்து, புதிய முன்னேற்றங்களைப் பெறுவதற்கான முக்கிய கட்டமாகும். அறைக்கூவல்களுடன் ஒப்பிடும் போது வாய்ப்புகள் மேலும் அதிகம் என்றார். மேலும், அவர் ஹாங்காங்கின் வளர்ச்சிக்கு 4 விருப்பங்களை முன்வைத்து, ஹாங்காங் மேலும் அருமையான எதிர்காலத்தைப் பெறுவதற்கு வழிக்காட்டினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இதுவரை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிலைப்புத் தன்மைக்கும், ஹாங்காங் மக்களின் நன்மைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

நிர்வாக நிலையை உயர்த்துவது, வளர்ச்சி இயக்காற்றலை அதிகரிப்பது, மக்களின் வாழ்க்கையிலுள்ள இன்னல்களைத் தீர்ப்பது, இணக்கம் மற்றும் நிலைப்புத் தன்மையைப் பேணிக்காப்பது ஆகியவை, ஷி ச்சின்பிங் முன்வைத்த 4 விருப்பங்களாகும். சீன மத்திய அரசு, ஹாங்காங் சகநாட்டவர்களுடன் முழுமையாக இணைந்துள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுக்காலம், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் வெற்றியைச் சாட்சியுரைத்துள்ளது. இந்த நல்ல கொள்கையில் ஊன்றி நிற்க வேண்டும். எதிர்காலத்தில், ஹாங்காங் புதிய நிலைமையைத் துவக்கி வைப்பது உறுதி!