ஆப்கன் நிலைமை பற்றிய சீன பிரதிநிதியின் கருத்து
2022-07-02 16:34:07

ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தின் போது, ஆப்கான் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மனித உரிமை நிலைமை பற்றிய விவாதம் ஜுலை முதல் நாள் நடைபெற்றது. ஜெனிவாவிலுள்ள ஐ.நா பணியகம் மற்றும் ஸ்வீட்சர்லாந்திலுள்ள இதர சர்வதேச அமைப்புகளுக்கான சீனாவின் பிரதிநிதி சென் ச்சு சீனாவின் நிலைப்பாட்டையும் கருத்துக்கான தெரிவித்தார்.

கடந்த 20க்கும் மேலான ஆண்டுகளில் மிக கடுமையான நில நடுக்கம் ஆப்கானுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கான் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மனித உரிமை கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. அந்நாட்டுக்கு 5 கோடி யுவான் மதிப்புள்ள அவசர மனித நேய உதவியை சீன அரசு, முதல் நேரத்தில் வழங்கியது. ஆப்கானின் தேவைக்கிணங்க, சர்வேதச சமூகம் அதற்கான உதவியை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.