சீனாவின் ஆட்சிமுறை பற்றிய புத்தகத்தின் 4ஆவது தொகுதி வெளியீடு
2022-07-02 16:19:17

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் வெற்றிகரமான துவக்கத்தை முன்னிட்டு, சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகத்தின் 4ஆவது தொகுதி சீனம் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வினியோகிக்கப்பட்டுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் நாள் முதல் 2022ஆம் ஆண்டு மே 10ஆம் நாள் வரை வழங்கிய உரையாடல்கள், சொற்பொழிவுகள், வாழ்த்துரைகள், உத்தரவுகள், வாழ்த்துக் கடிதங்கள் உள்பட 109 கட்டுரைகள் இப்புத்தகத்தின் 4ஆவது தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

முன்கண்டிராத சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமைகளையும் நோய் தொற்று தடுப்பு மற்றும் பொருளாதார சமூக வளர்ச்சியையும் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பையும் ஒருங்கிணைந்த முறையில் கையாண்டு, பொது மக்களை ஒன்று திரட்டி, சோஷலிச நவீன நாட்டைக் கட்டியமைக்கத் தொடங்கும் புதிய பயணத்தின் நடைமுறைகள் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.