சீனாவில் கிழக்கு-மேற்கு அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு
2022-07-03 16:49:03

சீனாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிடையே அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு முன்னேற்ற கூட்டம் ஜுலை 2ஆம் நாள் நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெற்றது. 270 கோடி யுவான் மதிப்புள்ள 136 ஒத்துழைப்பு திட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இவற்றில், திபெத் 5 புதிய ஒப்பந்தங்களிலும், சின்ஜியாங் 19 புதிய ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிடையேயான அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு இயங்குமுறை சார் சீரான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. மேற்கு பகுதியின் முக்கிய தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கும், அங்குள்ள சிறப்புமிக்க தொழில்கள் உயர்நிலைக்கு வளரவும் இது துணைபுரிகிறது.