சீன உள் விவகாரத்தில் தலையீடு செய்ய முயற்சி-பிரிட்டன்
2022-07-03 17:26:56

ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 25ஆவது ஆண்டு நிறைவின் போது, பிரிட்டன் தலைமை அமைச்சர் ஜான்சன் உரை நிகழ்த்தினார். அதோடு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஸ்தேலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அவற்றில், சீன-பிரிட்டன் கூட்டறிக்கையின் படி, ஹாங்காங் குடியிருப்பாளர் வரலாற்று பொறுப்பு ஏற்கும் பிரிட்டன்  ஹாங்காங்கை கை விடுக்காது என்று அவர்கள் தெரிவித்தனர். முந்தைய காலனி ஆட்சியாளரான, பிரிட்டன் தனது செல்வாக்கு வீழ்ந்து வரும் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்ப வில்லை என்பதையும் ஹாங்காங்கின் மூலம், சீனாவின் உள் விவகாரத்தில் தலையீடு செய்யும் கனவை பிரிட்டன் அரசியல்வாதிகள் கண்டு வருவதையும் அவர்களின் அபத்தான அரசியல் செயல்பாடுகள் வெளிகாட்டியுள்ளன

ஹாங்காங்கின் வளர்ச்சியை உண்மைகள் நிரூபிக்கும். உலகின் மிக தாராளமான பொருளாதாரச் சமூகம், சர்வதேச நிதி மையம், சர்வதேச போக்குவரத்து மையம், சர்வதேச வர்த்தக மையம் ஆகியவையாக ஹாங்காங் திகழ்கின்றது. ஒரே நாட்டில் இரு அமைப்பு முறைகள் என்ற கொள்கை ஹாங்காங்கில் நிறைய வெற்றி பெற்றுள்ளது.

ஹாங்காங், சீனாவின் ஹாங்காங். பிரிட்டனுடன் தொடர்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.