மணிப்பூர் நிலச்சரிவில் 34 பேர் பலி
2022-07-03 15:59:43

மணிப்பூர் மாநிலத்தின் நோனே மாவட்டத்தில் இருப்புப்பாதை கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஜுன் 29ஆம் நாளிரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் அவர்களின் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வீரர்களும் இந்நிலச்சரிவில் சிக்கினர். அவர்களைக் காப்பாற்றும் விதம் இந்திய இராணுவப் படையும் மீட்புதவிக் குழுவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

ஜுலை 2ஆம் நாளிரவு மணிப்பூர் மாநில அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 34 பேர் நிலச்சரிவில் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காணாமல் போயினர் என்று தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர் சம்பவ இடத்துக்குச் சென்று, ஒவ்வொரு உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும் 5 லட்சம் ரூபாயும், காயமுற்றோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தார்.