அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு பாதிப்பு
2022-07-04 14:01:55

அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஜூலை 3ஆம் நாள் வெள்ளப்பெருக்கால் 5 பேர் உயிரிழந்தனர்.  இந்த மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 179ஆக உயர்ந்துள்ளது.

3ஆம் நாள் வெள்ள நீர் குறைந்த போதிலும், இன்னும் 23 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.