கோபன்ஹேகனில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம்
2022-07-04 15:20:42

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு தெற்கே உள்ள அமேகர் தீவில் பெரிய வணிக வளாகம் ஒன்றில் 3ஆம் நாள் பிற்பகல் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று டென்மார்க் காவற்துறை 4ஆம் நாள் தெரிவித்தது.

தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் தெரியவில்லை. பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று கோபன்ஹேகன் காவல்துறையின் தலைவர் சோரன் தாமசன் தெரிவித்தார்.