சீன மற்றும் மியன்மார் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2022-07-04 15:28:19

மியன்மாரின் பாகனில் நடந்த லாங்காங்-மெகாங் ஒத்துழைப்பு பற்றிய ஏழாவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, கலந்து கொண்டார். அவர் 3ஆம் நாள், மியான்மர் வெளியுறவு அமைச்சர் வென்னா மவுங் ல்வினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன மற்றும் ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் ஆலோசித்தனர். பிராந்திய கட்டமைப்பில் ஆசியானின் மையத் தகுநிலையைச் சீனா உறுதியாக ஆதரிப்பதுடன், ஆசியான் நாடுகளுடன் கூட்டாகச் செயல்பட்டு, கிழக்கு ஆசிய ஒத்துழைப்பை சரியான திசைக்குக் கொண்டு செல்ல சீனா விரும்புகின்றது என்று வாங் யீ தெரிவித்தார்.

சீன-மியன்மார் பொருளாதாரத் தொழில் நுட்பம், தொற்றுநோய் எதிர்ப்பு, வேளாண்மை, வாழ்வாதாரம், பயிற்சி முதலிய ஒத்துழைப்பு ஆவணங்களின் பரிமாற்ற விழாவில் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர்.