உலக வளர்ச்சி முன்மொழிவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2022-07-04 17:30:25

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஸாவ் லீஜியான் ஜூலை 4ஆம் நாள் உலக வளர்ச்சி முன்மொழிவுக்கான முன்னேற்ற நிலைமை மற்றும் பணித் திட்டம் பற்றி கூறுகையில், திறப்பு மற்றும் சகிப்பு கொண்ட மனப்பாங்குடன் உலக வளர்ச்சிக்கான முன்மொழிவு முன்னேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இம்முன்மொழிவு மற்றும் ஒத்துழைப்பில் பங்கெடுப்பதைச் சீனா வரவேற்கிறது என்றார்.

மேலும், சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து, உலக வளர்ச்சிக்கான உயர் நிலை பேச்சுவார்த்தையிலுள்ள சாதனைகளை ஆக்கமுடன் செயல்படுத்தி, உலக வளர்ச்சி ஒத்துழைப்புக்கான மூலவள ஒதுக்கீட்டை அதிகரிக்க சீனா விரும்புகிறது. அத்துடன், வறுமை ஒழிப்பு, தானிய பாதுகாப்பு, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் தடுப்பூசி, காலநிலை மாற்றம், பசுமை வளர்ச்சி, தொழில்மயமாக்கம், எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு தரப்புகளுடன் பயனுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும் சீனா விரும்புகிறது என்றார்.