குரங்கம்மை நோய் கட்டுப்பாட்டை இழக்க கூடும் அமெரிக்கா
2022-07-04 14:12:32

குரங்கம்மை நோய் தடுப்பில் பைடன் அரசு மிகத் தாமதமாகச் செயல்பட்டதால், நோயின் பரவலை கட்டுப்படுத்த முடியாத அபாயம் அமெரிக்காவில் ஏற்படக் கூடும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தரவின்படி, அமெரிக்காவில் 460பேருக்கு குரங்கம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏன்னென்றால், அதைத் தொற்றிக் கொள்ளும் சாத்தியம் உள்ளவர்கள் அதிகமானோர் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.