ஹாங்காங் அரண்மனை அருங்காட்சியகம் மக்களுக்குத் திறப்பு
2022-07-04 16:59:33

ஹாங்காங் அரண்மனை அருங்காட்சியகம் ஜூலை 3ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 900க்கும் மேலான தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 166 தொல் பொருட்கள் தேசிய முதல் நிலை தொல் பொருட்களாகும். இவற்றின் மூலம் சீனாவின் நீண்டகால வரலாறு மற்றும் ஒளிவீசும் பண்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

ஜூலை 2ஆம் நாள் வரை, முன்கூடியே வெளியிடப்பட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் நுழைவுச்சீட்டுகளில் 85 விழுக்காடு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.