சீனத் தேசிய இனப் பகுதியில் கல்வி வளர்ச்சி மற்றும் உரிமைக்கான உத்தரவாதம்
2022-07-04 19:26:37

ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 50ஆவது கூட்டத் தொடரின் போது, சீனத் தேசிய இனப் பகுதியின் கல்வி துறை வளர்ச்சி மற்றும் உரிமைக்கான உத்தரவாதம் என்ற தலைப்பிலான கூட்டம் ஜுலை 2ஆம் நாள் நடைபெற்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிலையங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களும் அறிஞர்களும் இது பற்றி விவாதம் நடத்தினர்.

சீன சமூக அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் யூ மிங்சியாவ் கூறுகையில், சீனாவில் திபெத் இன மக்கள் வாழும் பகுதிகளில் கல்வி துறை வேகமாக வளர்ந்து வருவதோடு, ஒட்டுமொத்த கல்வித் தரம் பெரிதும் உயர்ந்துள்ளது. கல்வித் துறையில் பொது மக்களின் மனநிறைவு அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானின் ஆசிய உயிரின நாகரிக ஆய்வு மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைமை செயல் அதிகாரி ஷாகிர் கூறுகையில், சீனத் தேசிய இனப் பகுதிகளிலுள்ள உறைவிட வசதியுடைய பள்ளிகள், கனடாவில் இருந்த பழங்குடி இனத்தின் உறைவிட வசதியுடைய பள்ளிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. சீனாவின் வளர்ச்சியைத் தடுத்து சீர்குலைப்பது என்பது, மேலை நாட்டவர்கள் சிலர் வேறுபட்ட இவ்விரு கருத்தாக்கங்களைக் குழப்பமாக்குவதன் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.