மியான்மர் பிரச்சினைக்கான தீர்வு பற்றி சீனாவின் எதிர்பார்ப்புகள்
2022-07-04 18:17:46

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மியன்மாரில் லான்சாங்-மேகொங் ஒத்துழைப்புக்கான 7ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜுலை 3ஆம் நாள் கம்போடியாவின் துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான பிராக் சொகொன்னுடன் சந்திப்பு நடத்தி, மியான்மர் நிலைமை பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். மியான்மர் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய சீனாவின் 3 எதிர்பார்ப்புகளையும் வாங் யீ விளக்கிக் கூறினார்.

முதலாவதாக, அரசியல் அமைப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கட்டுக்கோப்புக்குள் மியான்மர் அரசியல் இணக்கத்தைத் தொடர்ந்து முன்னேற்ற சீனாவும் ஆசியானும் கூட்டாக ஊக்குவிக்க வேண்டும். இரண்டாவதாக, ஜனநாயக மாற்றத்தை மியான்மர் மீண்டும் தொடங்க சீனாவும் ஆசியானும் கூட்டாக ஊக்குவிக்க வேண்டும். மூன்றாவதாக, ஆசியான் அமைப்பு சொந்த வழிமுறையில் ஒற்றுமை மற்றும் தனது தலைமை தகுநிலையைப் பேணிக்காக்க வேண்டும் என்று வாங் யீ விருப்பம் தெரிவித்தார்.