சின்ஜியாங்கில் மக்கள் கண்ணியமான உழைப்பு பற்றிய ஆய்வறிக்கை வெளியீடு
2022-07-04 14:53:33

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பல்வேறு இன மக்கள் கண்ணியமான உழைப்பின் உண்மைகள் பற்றிய சுதந்திர ஆய்வறிக்கையை சின்ஜியாங் பல்கலைக்கழகம் 4ஆம் நாள் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்டுள்ளது.

ஆய்வுக் குழுவினர் சின்ஜியாங்கின் 14 வட்டங்கள் மற்றும் நகரங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹன், உய்கூர், கசக் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த சின்ஜியாங்கின் உழைப்பாளர்களுடன் ஓராண்டு ஆய்வில் ஈடுபட்டு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சின்ஜியாங்கின் பல்வேறு இன மக்களின் உழைப்பு அறிவுக்கு உகந்தவாறும் சுய விருப்பப்படியும் அமைந்துள்ளது.  அவர்களின் உழைப்பு சமூகத்தின் நவீனமயமாக்கத்தின் இயற்கையான வளர்ச்சிப் போக்காகும். அருமையான குடும்பம், சொந்த திறன் வளர்ச்சி உள்ளிட்ட மதிப்பை சின்ஜியாங்கின் பல்வேறு இன மக்கள், உழைப்பின் மூலம் வெளிக்காட்டியுள்ளனர் என்றும் இதில் சுட்டிக்காட்டப்பட்டது.