ஆப்பிரிக்க அமெரிக்கர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம்
2022-07-04 16:51:10

அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் அக்ரான் நகரில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஜுலை 3ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்தி, உள்ளூர் காவற்துறையினர் அண்மையில் சட்ட அமலாக்கப் போக்கில் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜெய்லண்ட் வாக்கரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அக்ரான் காவற்துறை வெளியிட்ட தகவலின்படி, காவற்துறையினர்கள் ஜுன் 27ஆம் நாள் அதிகாலை மேற்கொண்ட வழக்கமான வாகனச் சோதனையில் வாக்கர் போக்குவரத்து விதிகளை மீறியதாக சந்தேகிக்கப்பட்டது. ஜுலை 3ஆம் நாள் வெளியிடப்பட்ட சட்ட அமலாக்கப் பதிவுகள் தொடர்பான காணொளியில், வாகனத்திலிருந்து வாக்கர் இறங்கி தப்பிச் சென்ற போது, அவரைத் துரத்திச் சென்ற காவற்துறையினர்கள் துப்பாக்கி சூட்டை நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, வாக்கரின் உடம்பில் 60க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு காயங்கள் உள்ளன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 8 காவற்துறையினர்கள் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மீதான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.