உலக வளர்ச்சி பற்றிய கருத்தரங்கிற்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
2022-07-04 21:48:29

சிந்தனை கிடங்கு ஊடகங்களின் உயர் நிலை கருத்தரங்கு, உலக வளர்ச்சிக்கான பொது கடமை மற்றும் பங்களிப்பு என்ற தலைப்பில் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இக்கருத்தரங்கிற்கு வாழ்த்து செய்தி அனுப்பனார்.

நூறு ஆண்டுகளில் கண்டிராத நிலைமையிலும் கரோனா வைரஸ் பாதிப்பிலும், உலகப் பொருளாதார மீட்சி வலிமையற்றதாக உள்ளது. உலகின் வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையே வளர்ச்சி இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், உலக வளர்ச்சியை முன்னேற்றுவது மனித சமூகம் எதிர்நோக்கும் முக்கிய கருப்பொருளாகும். இதற்காக சீனா உலக வளர்ச்சி முன்மொழிவை வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, தொடரவல்ல வளர்ச்சிக்கான ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்தி, வலுவான, பசுமையான மற்றும் சீரான உலக வளர்ச்சியின் நனவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.

சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகத்தின் ஏற்பாட்டில், சீன சமூக அறிவியல் கழகம், சீன அரசவையின் வளர்ச்சி ஆய்வு மையம், சீன ஊடகக் குழுமம் ஆகியவை இக்கருத்தரங்கை கூட்டாக நடத்தின.