லான்சாங்-மெகொங் ஒத்துழைப்புக்கான 7வது வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம்
2022-07-05 17:01:51

லான்சாங்-மெகொங் ஒத்துழைப்புக்கான 7வது வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் ஜூலை 4ஆம் நாள் மியான்மாரில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மற்றும் மியான்மார் வெளியுறவு அமைச்சர் வுன்னா மவுங் ல்வின் இக்கூட்டத்துக்குக் கூட்டாகத் தலைமைத் தாங்கினார்.

வாங்யீ கூறுகையில், லான்சாங்-மெகொங் ஒத்துழைப்பு துவங்கியது முதல் இதுவரை, 6 நாடுகளின் மக்களுக்கு உண்மையான நலன்களை வழங்கி வருகிறது. உலகம் கொந்தளிப்பான மாற்றங்கள் ஏற்படும் கட்டத்தில் உள்ளது. லான்சாங்-மெகொங் ஒத்துழைப்பின் தரம் மற்றும் நிலை உயர்த்தப்பட வேண்டும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்மாதிரி பகுதி, உலக வளர்ச்சிக்கான முன்னோடி மண்டலம், உலகப் பாதுகாப்புக்கான சோதனை மண்டலம் ஆகியவற்றை உருவாக்க, 6 நாடுகள் கூட்டாகப் பாடுபட்டு, மேலும் நெருங்கிய லான்சாங்-மெகொங் பொது சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

மேலும், கூட்டு செய்தி குறிப்பு மற்றும் 4 கூட்டறிக்கைகள் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டன. விபரமான தரவுகள், லான்சாங்-மெகொங் ஒத்துழைப்புக்கான பெரும் சாதனைகளைக் காட்டுகின்றன.