சீனர்களின் சராசரி ஆயுள்காலம் 77.93 ஆண்டுகளாக உயர்வு
2022-07-05 19:41:06

தற்போது சீனர்களின் சராசரி ஆயுள்காலம் 77.93 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. உடல்நலம் தொடர்பான முக்கிய குறியீடுகள், நடுத்தர மற்றும் உயர் வருமானமுடைய நாடுகளின் முன்னணியில் உள்ளன. ஆரோக்கிய சீனா என்ற நடவடிக்கையின் 2022ஆம் ஆண்டிற்கான முக்கிய இலக்குகள் முன்கூட்டியே நனவாக்கப்பட்டுள்ளன. சீனத் தேசிய சுகாதார ஆணையம் ஜுலை 5ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் கிடைத்த தகவலின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

ஆரோக்கிய சீனா என்ற நடவடிக்கை பல முயற்சிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடல்நல முன்னேற்ற கொள்கை முறைமையின் உருவாக்கம், வாழ்நாள் முழுவதிலும் சுகாதாரப் பராமரிப்புத் திறன் உயர்வு, கடும் நோய் தடுப்பு உள்ளிட்ட 5 துறைகளில் சீனா முன்னேற்றம் அடைந்துள்ளது. நல்ல துவக்கத்தை கண்டுள்ள ஆரோக்கிய சீனா என்ற நடவடிக்கை தடையின்றி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.