அமெரிக்க நிதி அமைச்சருடன் லியூ ஹே காணொளி தொடர்பு
2022-07-05 16:15:36

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், துணை தலைமை அமைச்சரும், சீன-அமெரிக்க பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தைக்கான சீனத் தரப்பின் பொறுப்பாளருமான லியூ ஹே, ஜுலை 5ஆம் நாள் முற்பகல் அழைப்பின் பேரில், அமெரிக்க நிதித் துறை அமைச்சர் யேல்லனுடன் காணொளி வழியாக தொடர்பு கொண்டார். ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை, உலக தொழில் சங்கிலி மற்றும் வினியோகச் சங்கிலியின் நிலைத்தன்மை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் திறந்த மனதுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தற்போதைய உலகப் பொருளாதாரம் கடும் சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இருதரப்பு ஒட்டுமொத்த கொள்கைகள் பற்றிய பரிமாற்றத்தை வலுப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலக தொழில் சங்கிலி மற்றும் வினியோகச் சங்கிலியின் நிலைத்தன்மையைக் கூட்டாகப் பேணிக்காப்பது, இருநாடுகளுக்கும் உலகிற்கும் துணைபுரியும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். சீனா மீதான கூடுதல் வரி வசூலிப்பு மற்றும் தடை நடவடிக்கையை அமெரிக்கா நீக்குவது, சீனத் தொழில் நிறுவனங்களை நியாயமாக நடத்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் மீதான கவனத்தை சீனத்தரப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.