சுதந்திரத் தின அணிவகுப்பின் போது துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது
2022-07-05 16:33:56

அமெரிக்காவின் இல்லினோய்ஸ் மாநிலத்தின் ஹைலண்ட் பார்க் நகரில் 4ஆம் நாள் சுந்திரத் தின அணிவகுப்பு நடைபெற்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமுற்றனர்.

இச்சம்பவத்தை ஏற்படுத்தியதாக ஐயத்துக்குரிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று உள்ளூர் காவற்துறை அதே நாள் அறிவித்த போதிலும், குற்றத்துக்கான அவரது நோக்கம் பற்றி தெரிவிக்கவில்லை.

அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் 4ஆம் நாள் பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில், இச்சம்பவம் நிகழ்ந்தது குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், ஹைலண்ட் பார்க் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப்பட இருந்த சுதந்திரத் தினக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.