சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் முதல் சுற்று பேச்சுவார்த்தை வெற்றி
2022-07-05 19:39:27

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை மேற்கொண்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இருப்பினும், கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இலங்கை வழங்குவது என்பது சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கான முன்நிபந்தனையாகும் என்று அந்நாட்டின் தலைமை அமைச்சர் ரணில் விக்ராமசிங்கே ஜுலை 5ஆம் நாள் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் அவர் வெளியிட்ட சிறப்பு அறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை ஆகஸ்டில் கடன் மறுசீரமைப்பு திட்டம் பற்றிய அறிக்கையை வழங்க உள்ளது என்று கூறினார்.