அல்ஜீரிய அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
2022-07-05 16:44:17

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 5ஆம் நாள், அல்ஜீரிய அரசுத் தலைவர் தெபனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி, சுதந்திர புரட்சியில் அல்ஜீரியா வெற்றி பெற்ற 60ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அல்ஜீரியாவின் சுதந்திர புரட்சிக்கு சீன அரசும் மக்களும் உதவிகளையும் ஆதரவுகளையும் வழங்கினர்.  இரு நாட்டு மக்களும் போராட்டத்தில் ஆழமான நட்புறவை உருவாக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நடைமுறை ஒத்துழைப்புகள் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளன. சீன-அல்ஜீரிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு இடைவிடாமல் வளர்ந்து வருகின்றது என்று ஷி ச்சின்பிங் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

அதே நாள், சீன தலைமை அமைச்சர் லீ கெச்சியாங், அல்ஜீரிய தலைமை அமைச்சர் அபுது லாஹ்மனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.