சிந்தனை கிடங்கு ஊடகங்களின் உயர் நிலை கருத்தரங்கு நடைபெற்றது
2022-07-05 16:40:32

சிந்தனை கிடங்கு ஊடகங்களின் உயர் நிலை கருத்தரங்கு, உலக வளர்ச்சிக்கான பொது கடமை மற்றும் பங்களிப்பு என்ற தலைப்பில் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் அமைச்சர் ஹுவாங் குன்மிங் இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.

சர்வதேச சமூகம் எப்படி வளரும் என்ற கேள்வி எழுந்த போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வழங்கிய உலக வளர்ச்சி முன்மொழிவு சர்வதேச சமூகத்தின் வரவேற்பை பெற்றுள்ளது. தொடரவல்ல வளர்ச்சிக்கான ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலுக்கும் உலக வளர்ச்சி ஒத்துழைப்புக்கும் இது துணை புரியும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் இத்துவக்க விழாவில், ஐ.நா துணை தலைமை செயலாளரும், ஆசிய பசிபிக் பொருளாதார சமூக ஆணையத்தின் செயல் செயலாளருமான அலி ஷாஹ்பானா கூறுகையில்,

பல்வேறு நாடுகள் கூட்டாக முயற்சி செய்து, தொடரவல்ல வளர்ச்சிக்கான ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.