ஆப்பிரிக்க வம்சாவழியினரின் மீதான சுட்டுக்கொலை அமெரிக்க சுதந்திரத்துக்கு அவமானம்
2022-07-05 15:35:42

2 ஆண்டுகளுக்கு முன் “என்னால் சுவாசிக்க முடியாது” எனக் கூறியவாறு இருந்த ஃப்லோயிட் கொல்லப்பட்டது, இன்னும் மக்களின் நினைவில் பதிந்துள்ள நிலையில், ஆப்பிரிக்க வம்சாவழியினரின் மீது காவல் துறை புதிய வன்முறையை நிகழ்ந்தியுள்ளது. அண்மையில், அமெரிக்காவின் அக்ரொன் நகரில் ஆப்பிரிக்க வம்சாவழியைச் சேர்ந்த ஜெய்லந்து வால்கர், காவற்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட காணொளி ஜுலை 3ஆம் நாள் வெளியிட்டப்பட்டது. 8 காவற்துறையினர் சுமார் 90 முறை துப்பாக்கியால் சுட்டனர். வால்கரின் உடலில் 60 காயங்கள் இருப்பது உறுதிச்செய்யப்பட்டதாக உள்ளூர் காவற்துறை தெரிவித்தது.

இது குறித்து தி போஸ்டன் குளோப் செய்தித்தாள் வெளியிட்ட ஒரு கட்டுரையில், மோசமான ஜுன் திங்களுக்குப் பின் வந்த அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடத்தக்கது இல்லை என்று விமர்சித்துள்ளது. தற்போது அக்ரொன் நகரில் காவற்துறையின் வன்முறைக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், உள்ளூரில் சுதந்திர தினக் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேப்பிங் போலீஸ் வன்முறை எனும் இணையதளத்தில் வெளியான தரவுகளின்படி 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை, அமெரிக்க காவற்துறையினர் நடத்திய நடவடிக்கைகளில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2563ஐ எட்டியது. இவர்களில் 565 பேர், அதாவது 22 விழுக்காட்டினர், ஆப்பிரிக்க வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். சட்டத்தை அமல்படுத்தும் போது, ஏற்படும் உயிரிழப்புகளில் வெள்ளை இனத்தவரை விட, கருப்பினத்தவர்களின் உயிரிழப்பு சாத்தியம், 2.9 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.